ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்றார் அமித் ஷா! அமைச்சராவது எப்போது?

பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இருவரும் இன்று ராஜ்ய சபா உறுப்பினர்களாக பதவி ஏற்றனர். குஜராத்தில் நடந்த தேர்தலில் இருவரும் வென்று ராஜ்யசபா உறுப்பினர்களாகினர்.
ராஜ்யசபாவில் அமித் ஷா மற்றும் இரானி இருவரும் முதல் முறையாக உறுப்பினர்களாகியுள்ளனர்.
துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, இவ்விருவருக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
சமஸ்கிருதத்தில் பதவி பிரமாணம் செய்தபிறகு, நாயுடுவின் பாதங்களைத் தொட்டு ஆசி பெற்றார் இரானி."ராஜ்ய சபாவில் ஷா நுழைவது கட்சிக்கு ஒரு ஊக்கத்தை கொடுக்கும்" என ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
