Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகும் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

•On September 21, 2021
Muratu Sankar
Share

மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகும் "சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்" படம் பூஜையுடன் தொடங்கியது

'லார்க் ஸ்டுடியோஸ்' என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் இப்படத்தை தயாரிக்கிறார். அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். இயக்குகிறார். காமெடி ஜானரில் இப்படம் தயாராகிறது.

இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை அஞ்சு குரியன் மற்றும் நடிகை மேகா ஆகாஷ் நடிக்கின்றனர். இவர்களுடன் பாடகர் மனோ, நடிகர் மா கா பா ஆனந்த், ஷா ரா, மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா , கே பி ஒய் பாலா, 'மைக்செட்' அபினாஷ், நடிகை வித்யா வினுமோகன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

ஆர்தர். ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். நடன காட்சிகளை நடன இயக்குனர் சாண்டி அமைக்கிறார். சண்டை பயிற்சி ஃபீனிக்ஸ் பிரபு மேற்கொள்கிறார்.

ஃபேண்டசி காமெடி ஜானரில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதன் தொடக்க விழா சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

இவ்விழாவில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்’ மதன், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான டாக்டர். பிரபு திலக், ‘A1’ மற்றும் ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஜான்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படத்தின் டைட்டில் இளைய மற்றும் தலைமுறையினரை கவர்ந்திருப்பதால், தொடக்க விழாவின் போதே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.