பாகுபலி சேலை, இணையதளம், விரைவில் விற்பனை...!

இந்திய திரையுலகின் மெகா பட்ஜெட் திரைப்படமான பாகுபலி 2, உலகம் முழுவதும் 8000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மட்டும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பாகுபலி 2 வெளியாகியுள்ளது.
திரைக்கு வருவதற்கு முன்றே பல கோடிகளில் வருவாய் ஈட்டியுள்ள பாகுபலியை, மேலும் பல வழிகளில் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளது. பிரம்மாண்டம், காவியம், நடிப்பு என பலவழிகளில் ரசிகர்களை கவர்ந்துள்ள பாகுபலி, பெண் ரசிகர்களையும் விட்டுவைக்கவில்லை. பிரபாசின் தீவிர ரசிகையாகவிட்ட நபர் ஒருவர் தன் முதுகிற்கு பின்னால், பாகுபலி உருவத்தை பச்சை குத்தியிருந்தார்.
இந்நிலையில், சொந்தமாக அச்சுதொழில் செய்து வருபவர், பாகுபலி திரை சித்திரத்தை சேலையில் பிரிண்ட் செய்துள்ளார். தனக்கென்று பிரத்யேகமாக செய்துள்ள சேலையை அணிந்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார். இந்த சேலை தற்போது டிரெண்டாகி உலகம் முழுவதும் வலம் வருகிறது...
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
