Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பல பிரபலங்கள் ஆச்சர்யத்தில்: ஆடம்பரம் இல்லாத நடிகை கஸ்துரியின் மகள்!

•On April 17, 2017
kasthuri-daugter
Share
kasthuri-daugter கஸ்தூரியின் மகளா இவள் என்று பல பிரபலங்களும் ஆச்சரியமாக பார்த்தனர். நடிகை என்றாலே ஆடம்பரத்திற்கு சொல்லவா வேண்டும். அதுவும் நடிகையின் மகளின் ஆடம்பரத்துக்கு பஞ்சமிருக்காது. சினிமா பிரபலங்கள் தங்களை எப்போதுமே ஆடம்பரமாகவே காட்டிக்கொள்வர். நேற்று பிரபல தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு தேவையில்லாமல் விலையுயர்ந்த பொருட்களை வாங்கித்தருவதைப்பற்றிய நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரி தனது மகளுடன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் தனது மகளை அறிமுகப்படுத்தும் போது, பிறந்தநாளன்று கூட அந்த சிறுமி மிகவும் சாதாரண உடையே அணிந்து கூந்தலை பின்னி வந்திருந்தார். பலருமே ஆச்சர்யப்படும் விதமாகவே இருந்தார் அந்த சிறுமி. நடிகை கஸ்தூரி கூறும் போது, ‘‘எனது மகளுக்கு தேவையானதை மட்டும்தான் நான் வாங்கித்தருவேன், தேவையற்ற ஆடம்பரங்களை தவிர்த்து விடுவேன்’’ என்றார். மேலும், இதற்கும் நடிகை கஸ்தூரி பல வருடங்களாக குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.