நட்சத்திர கிரிக்கெட்டில் சிறப்பு பார்வையாளராக பிரதமர் மோடி பங்கேற்கிறாரா..?

ஜனவரி மாதம் என்றாலே பொங்கல் சீசன் களைகட்டுவது போல சினிமா நட்சத்திரங்களை பொறுத்தவரை சி.சி.எல் எனப்படும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி உற்சாக கொண்டாட்டம் ஆரம்பித்துவிடும்.. இந்த வருடத்திற்கான சென்னை ரைனோஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டது.
விஷால் கேப்டன் பதவியிலிருந்து விலகவே, இந்தமுறை ஜீவா கேப்டனாகி இருக்கிறார். சென்னை ரைனோஸ் அணி கேரளா மற்றும் போஜ்பூரி அணிகளுடன் மோத இருக்கிறது. வரும் ஜன-11ஆம் தேதி முதல் துவங்க இருக்கும் இந்த போட்டிகள் சன் தொலைக்காட்சியில் லைவ்வாக ஒளிபரப்பாக இருக்கிறது.
போஜ்பூரி அணியில் அந்த மொழி நடிகரும் எம்.பியுமான மனோஜ் திவாரி இருப்பதால் அவர் மூலமாக இந்த நட்சத்திர கிரிக்கெட்டில் சிறப்பு பார்வையாளராக பிரதமர் மோடியை பங்கேற்க வைக்க முயற்சி நடப்பதாகவும் தெரிகிறது. கடந்த முறை போல அல்லாமல் சினிமா நட்சத்திரங்களை தவிர மற்றவர்களை அணியில் சேர்க்க கூடாது எனவும் அனைத்து அணிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
