Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

திண்பண்டங்களின் வசூலில் தான் திரையரங்குகள் இயங்குகிறது - 'ரோகினி' பன்னீர்செல்வம்...

•On April 26, 2017
rokini panneer
Share
rokini panneer திரையரங்குகளில் டிக்கட் விலையை விட கேன்டீனில் விற்கப்படும் திண்பண்டங்களின் விலை மற்றும் வாகன நிறுத்தத்தின் கட்டணம் அதிகமாக உள்ளது என நம் 'ஒற்றன் செய்தி' நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் 'ரோகினி' பன்னீர்செல்வம் கூறியதாவது, திரைப்பட டிக்கட்டுகளின் விலை 1999 ஆம் ஆண்டு நிர்ணயித்த விலை அப்படியே உள்ளதாகவும் அதை திருத்தி அமைக்க தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். தற்போதுள்ள டிக்கட்டின் விலை மிக குறைவாக உள்ளதால் திரையரங்குகள் கான்டீன் வருமானத்தை வைத்து தான் நடைபெறுவதாகவும் தெரிவித்தார். தமிழக அரசு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று டிக்கட்டுகளின் விலையை திருத்தி அமைத்தால், கான்டீனில் விற்கப்படும் திண்பண்டங்களின் விலையை அவர்களால் குறைக்க இயலும் என தெரிவித்தார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.