Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஜோதிகா வின் மாஸ் ரீ-என்ட்ரியில் "மகளிர் மட்டும்" படத்தின் இசை வெளியீடு!...

•On April 24, 2017
jothikaa
Share
jothikaa இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளிவந்த ‘வாலி’ திரைப்படத்தின் மூலம், ‘சேனா’ என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனது அழகாலும், நடிப்பாலும் பல வெற்றிப் படங்களில் நடித்து அனைவரது மனதையும் கவர்ந்தவர். அதோடு நில்லாமல், நடிகர் சூர்யாவைத் திருமணம் செய்துகொண்டார். அதன்பின், ஒரு சில படங்கள் மட்டும் நடித்துவிட்டு திரைப்படத்துக்கு நீண்ட இடைவெளிவிட்டிருந்தார். அதன்பின், ‘36 வயதினிலே’ என்ற படம் மூலம் பெரிய மாஸ் ரீ-என்ட்ரி கொடுத்தார் ஜோதிகா. அதைத் தொடர்ந்து, அடுத்த படமான ‘மகளிர் மட்டும்’ படத்தைத் தற்போது முடிந்துள்ளார். ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்துக்கான கெத்தான லுக், பெரிய மோட்டார் பைக் என மோஷன் போஸ்டரும், டீசரும் வெளியாகி ஆர்வத்தை அதிகப்படுத்தி இருந்தது. இன்று காலை இசை வெளியிடப்பட்டது, மேலும் இப்படத்தை மே மாதம் 19ஆம் தேதிக்குள் திரைக்கு வரவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. magalir தேசிய விருதுபெற்ற ‘குற்றம் கடிதல்’ திரைப்படத்தின் இயக்குநர் பிரம்மா இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் நாசர், ஊர்வசி, பானுபிரியா, சரண்யா பொன்வண்ணன் என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையில், சூர்யாவின் 2D தயாரிப்பு நிறுவனத் தயாரிப்பில் ‘மகளிர் மட்டும்’ விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. மேலும் இன்று மகளிர் தின என்பதால் இந்த படத்தின் ஒரு பாடலையும் வெளியிட்டு உள்ளார். ஜிப்ரான் இசையில் "அடி வாடி திமிரா" என்று தொடங்கும் இந்த பாடல் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.