சேலம் வந்து சேர்ந்தார் கேரள மாணவி ஹாதியா!

 ,
மதம் மாறி திருமணம் செய்துக்கொண்ட கேரள மாணவி ஹாதியா சேலம் வந்தடைந்தார். கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் சேலம் ஹோமியோபதி மருத்துவக்கல்லூரியில் படித்து வந்தார். இவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இதுதொடர்பான வழக்கு உச்சநிதமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஹாதியா சேலம் ஹோமியோபதி கல்லூரியில் தனது படிப்பை தொடர உச்சநீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது.
மேலும் கல்லூரி டீன் தான் மாணவியின் கார்டியன் என்றும் மாணவியின் முழு பாதுகாப்புக்கும் அவர் தான் பொறுப்பு என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து மாணவி ஹாதியா டெல்லியில் இருந்து இன்று பிற்பகல் விமானம் மூலம் கோயம்புத்தூருக்கு வந்தார். அவருக்கு கோவை விமான நிலையத்தில் எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு அளிக்க கூடின. ஆனால் போலீசார் பாதுகாப்பாக அவரை வாகனத்தில் ஏற்றி சாலை மார்க்கமாக சேலம் அழைத்து வந்தனர். ஹோமியோபதி கல்லூரிக்கு வந்துள்ள மாணவி ஹாதியா தனது படிப்பை தொடரவுள்ளார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
