Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சென்னை கோயம்பேட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு!

•On November 28, 2017
OPS
Share

 OPS
 , சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தற்பொழுது ஆய்வு செய்து வருகிறார். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வரும் சென்னையின் பிரதான பகுதிகளில் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் மற்றும் அதன் அருகில் அமைந்திருக்கும் மார்க்கெட்டும் அடங்கும். அங்கு அநேக இடங்களில் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், அத்துடன் சுகாதார வசதிகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் இந்த புகார்களின் அடிப்படையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தற்பொழுது ஆய்வு செய்து வருகிறார். அவருடன் அரசு மற்றும் மாநகராட்சி அதிகாரிகளும் இந்த ஆய்வுப் பாணியில் ஈடுபட்டுள்ளனர்

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.