‛ஓட்டல்களில் சேவை கட்டணம் வசூலிப்பது கட்டாயமல்ல' அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்...

ஓட்டல்களில் சேவை கட்டணம் வசூலிப்பது கட்டாயமல்ல' என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் டுவிட்டரில் தெரிவித்ததாவது: ஓட்டல்கள், விடுதிகளில் சேவை கட்டணம் என்பது வாடிக்கையாளர்களின் விருப்பம், அது கட்டாயமல்ல. இது தொடர்பாக மத்திய அரசின் விளக்கங்கள், அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
இதன்படி, ஓட்டல் பில்களில் சேவை கட்டணப் பகுதி வெறுமையாக இருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டால் அதில் கட்டணத்தை பூர்த்தி செய்யலாம். இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
