Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

எதையும் இலவசமாக கொடுக்கவேண்டாம் நடிகர் விஷாலின் வேண்டுகோள்!..

•On April 19, 2017
visal
Share
visal உங்களது உழைப்பு சம்பந்தமான எதையும் இலவசமாக வழங்கி விடாதீர்கள் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷால் கேட்டுக் கொண்டுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த தென்னிந்திய தமிழ் பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் சங்கத் தலைவராக நடிகர் விஷால் தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவியேற்றவுடன் நடிகர் விஷால், ‘‘வெளியாகும் படத்தின் விமர்சனத்தை மூன்று நாள் கழித்து வெளியிடுங்கள்’’ என்று மீடியாக்களிடம் கோரிக்கை வைத்திருந்தார். தற்போது தயாரிப்பாளர்களுக்கு இன்னொரு செய்தியையும் வெளியிட்டுள்ளார். அதில், ‘‘தயாரிப்பாளர் அனைவரும் உங்களது பாடல்கள், டிரைலர் என எதையும் இலவசமாக எந்த ஒரு நிறுவனத்துக்கும் விற்றுவிடாதீர்கள். அது உங்களுடைய உழைப்பு. அந்த உழைப்புக்கு தகுந்த மதிப்பை நீங்கள் பெற வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.