Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இந்த பொங்கலுக்கு ‘ஆம்பள’ மட்டும் தான் வர்றார்..!

•On January 3, 2015
aambala selfie 1
Share

இந்த முறை பொங்கல் திருவிழா ரணகளமாகத்தான் இருக்கப்போகிறது என்கிற சூழல் நிலவிவந்த நிலையில், தற்போது அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ பின் வாங்கியதால் பொசுக்கென்று ஆகிவிட்டது. நீண்ட நாட்களாக ரசிகர்களை எதிர்பார்ப்பில் வைத்திருக்கும் ஷங்கரின் ‘ஐ’ படம் பொங்கலை முன்னிட்டு, ஆனால் சில நாட்கள் முன்னதாகவே அதாவது ஜனவரி-9ஆம் தேதியே வெளியாகும் என்று சொன்னார்கள்.

அதுவும் இப்போது வரை உறுதியாகமலேயே இருக்கிறது. இந்த இரண்டு பெரிய படங்கள் வெளியாகும் என்பதால் தான் சிவகார்த்திகேயனின் ‘காக்கி சட்டை’யும் கார்த்தி நடிக்கும் ‘கொம்பன்’ படமும் இந்த அதிரடி ஜல்லிக்கட்டில் இருந்து விலகின.

அந்தவகையில் பார்த்தால் சுந்தர்.சி இயக்கத்தில் ‘ஆம்பள’ விஷால் மட்டும் தான் எதிர்க்க ஆளில்லாமல் வெற்றிவாகை சூடுவார் என்று தெரிகிறது. சேரனின் ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’யும் பொங்கல் ரிலீஸ் தான் என்றாலும் அது டிவிடி மூலமாக வீடுகளுக்கே வருவதால் இந்த போட்டியில் சேராது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.