ஆர்.கே.நகர் இடைதேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்!

ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் நவம்பர் 27ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்கும் என்றும் மனுதாக்கல் செய்ய டிசம்பர் 4ஆம் தேதி கடைசி நாள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறுகிறது.
அதேபோல் மனுவை திரும்பப் பெற டிசம்பர் 7ஆம் தேதி கடைசி நாள் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 24ல் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் சென்னை மாவட்டத்தில் தேர்தல் நடைமுறைகள் இன்று முதல், உடனடியாக அமலுக்கு வருகின்றன.
 ,Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
