ஆர்யாவை தொடர்ந்து நட்புக்கரம் நீட்டும் ஜீவா..!

ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றிகரமாக வளர்ந்துவரும் நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் சோதனைகள் ஏற்படவே செய்யும். அப்போது அவர்கள் மீண்டும் ஒரு தேர்வு எழுதி தங்களை நிரூபிக்க தயாராவார்கள். அந்த நேரத்தில் தன்னை வளர்த்துவிட்ட இயக்குனர்களையோ, அல்லது தான் ஹிட் கொடுத்து கைதூக்கிவிட்ட நடிகர்களையோ தேடிப்போவதும் சகஜமான நிகழ்வுதான்.
அப்படி ஒரு சூழ்நிலை இயக்குனர் ராஜேஸுக்கும் ஏற்பட்டது. ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’வின் ரிசல்ட் இதற்குமுன் அவர் கொடுத்த மூன்று ஹிட்டுகளின் வெற்றியையும் திரைபோட்டு மறைத்தது. எனவே மீண்டும் அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
அந்த முயற்சியில் தான் தற்போது அவர் இயக்கிவரும் ‘வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க’ என்கிற படத்தில் கதாநாயகனாக மீண்டும் அவருடன் இணைந்தது நட்புக்கரம் நீட்டினார் ஆர்யா. அதுமட்டுமல்ல, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ வெற்றிக்கு ராஜேஸுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக படத்தையும் தனது சொந்த நிறுவனமான ‘தி ஷோ பீப்பிள்’ மூலமாகவே தயாரிக்கவும் செய்கிறார்.
அதேபோல ‘சிவா மனசுல சக்தி’ படம் மூலமாக ஜீவாவுக்கு அவரது கேரியரில் மிகப்பெரிய பிரேக் தந்தார் ராஜேஸ். அதன் நன்றிக்கடனாகவும் ‘யான்’ படம் கொடுத்த அடியில் இருந்து மீண்டு வரவும் மீண்டும் ராஜேஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ஜீவா. ஆர்யாவின் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக ஜீவா நடிக்கும் படத்தை ராஜேஸ் இயக்கவிருகிறார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
