Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அரக்கோணம் பள்ளி மாணவிகள் தற்கொலை.. தலைமை ஆசிரியை உள்பட இருவர் சஸ்பெண்ட்!

•On November 25, 2017
revathi1
Share
 revathi1
 அரக்கோணம் அருகே பனப்பாக்கத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் 4 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  , மாணவிகளைத் தொடர்ந்து திட்டி வந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் பள்ளியின் தலைமை ஆசிரியை ரமாமணி, ஆசிரியை மீனாட்சி சுந்தரேஸ்வரி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  , மேலும், துறை ரீதியாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், திங்கட்கிழமை பள்ளி திறந்த பிறகு மாணவிகளிடமும் விசாரணை நடத்தப்படும் என்றும் கல்வித் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.  ,

சம்பவத்தின் பின்னணி:

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே கிணற்றில் குதித்து 4 மாணவிகள் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே பனப்பாக்கத்தைச் சேர்ந்த ரேவதி (16), சங்கரி (16), தீபா (16), மனீஷா (16) ஆகிய 4 பேர் அங்குள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தனர். ஒரே வகுப்பில் படித்து வந்த இவர்கள் 4 பேரும் சரியாகப் படிக்கவில்லை என புகார் கூறப்பட்டது. ce4a50e0d9029563b7b03cff98b107f2 இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை மாணவிகள் 4 பேரும் வழக்கம் போல் சைக்கிளில் பள்ளிக்கு வந்துள்ளனர். காலையில் வகுப்பில் அமர்ந்து பாடங்களை பயின்றதாகத் தெரிகிறது. பிற்பகலில் இந்த 4 மாணவிகளும் திடீரென பள்ளியில் இருந்து காணாமல் போய்விட்டனர்.  , இந்நிலையில், அந்த 4 பேரும் ராமாபுரம் கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவரின் நிலத்தில் உள்ள 70 அடி ஆழம் கொண்ட கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. கிணற்றின் அருகே இருந்த இவர்களது புத்தகப் பை, செருப்பு ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.  , தகவலறிந்து அங்கு சென்ற ராணிப்பேட்டை, அரக்கோணம் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்து ரேவதி, சங்கரி, தீபா, மனீஷா ஆகிய 4 பேரின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூரில் உள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  , சம்பவ இடத்தை மாவட்ட எஸ்.பி. பகலவன், டி.எஸ்.பி. குத்தாலிங்கம், ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) அப்துல் முனீர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். காரணம் என்ன? சரியாகப் படிக்கவில்லை என ஆசிரியர் திட்டியதாகவும், இதனால் மனமுடைந்த 4 மாணவிகளும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.  ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.