அட்லி இயக்கத்தில் மீண்டும் இளையதளபதி உடன் இணையும் வைகைபுயல்!..

சில வருடங்களுக்கு முன் (ப்ரண்ட்ஸ், பகவதி, வசீகரா, மதுரா, சச்சின், போக்கிரி, வில்லு, சுறா,) போன்ற படங்களில் விஜயுடன் இணைந்து நடித்த வைகைபுயல் வடிவேலு மீண்டும் ஐந்தாண்டுகளுக்கு பிறகு தற்போது அட்லி இயக்கும் ”விஜய் 61 ” திரைப்படத்தில், விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘விஜய் 61’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. தற்போது சென்னையிலுள்ள ஈ.வி.ஆர் பொழுதுபோக்கு பூங்காவில்,விஜய் 61 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ’விஜய் 61’ படத்தின் படப்பிடிப்பில் வடிவேலு நடித்து வருகிறார். அவருக்கு விஜய்க்கும் இடையிலான நகைச்சுவை காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. நகைச்சுவை காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்ததும், அடுத்ததாக ஐரோப்பிய நாடுகளில் படப்ப்பிடிப்பு நடைபெற உள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
