Tag: யோகிபாபு

ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் சுந்தர் C நடிப்பில் VZ துரை இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாரர் திரைப்படம் “ இருட்டு “....

சிவம் மீடியா ஒர்க்ஸ் பட  நிறுவனம் அதிக பொருட் செலவில் தயாரித்துள்ள படம் ‘சண்டி முனி.’ இந்த படத்தில் கதாநாயகனாக நட்டி நட்ராஜ் நடிக்கிறார். கதாநாயகியாக...

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் , கயல் ஆனந்தி , யோகிபாபு , லிஜிஸ் நடிக்கும் படம் “பரியேறும் பெருமாள்”. சந்தோஷ்நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படம் செப்டம்பர் 28 அன்று வெளியாகிறது . இந்த படத்தின் முழு படப்பிடிப்பையும் “கிம்பல்” தொழில் நுட்பத்தில்படமாக்கியிருக்கிறார்கள். அந்த அனுபவம் குறித்து படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் கூறுகையில், “பரியேறும் பெருமாள் என்னுடைய இரண்டாவது படம். முதல் படம் “மாலை நேரத்து மயக்கம்”. நான் பிறந்து வளர்ந்தது சென்னைதான் எனக்கு அதிகமாக கிராமத்துவாழ்க்கை பற்றி பரிச்சயம் இல்லை. எனது முதல் படமும் நகரத்து கதை சார்ந்த படம்தான். ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார்தான் எனது குரு. அவரிடமிருந்துகற்றுக்கொண்ட விசயங்கள்தான் என்னை புதிதாக இயங்க சொல்கிறது.  எனக்கு சில எழுத்தாளர்கள் நண்பர்கள் இருக்கிறார்கள் வாசிப்பு அனுபவமும் கொஞ்சம்உண்டு. அந்த வகையில் என்னோடு அறிமுகமானவர்தான் இயக்குனர் மாரி செல்வராஜ் . “பரியேறும் பெருமாள்” கதையை கேட்டவுடன் இந்த கதைக்கு நாம்வழக்கமான ஒளிப்பதிவு செய்யாமல் கொஞ்சம் மெனக்கடவேண்டும் என்கிற எண்ணம் வந்தது. படப்பிடிப்பு முழுக்க முழுக்க திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பகுதிகள் . அந்த ஊர்களின் பசுமை, வறட்சி பகுதிகள் , தெருக்கள் ,வெயில் மனிதர்கள்,விலங்கினங்கள் அனைத்தையும் அப்படியே படம்பிடிக்க வேணும், கூடவே ஒரு அழகியலும் இருக்கவேண்டும் என்கிற ஆசை. கதைக்களம் , அதன் வேகம் இதற்குஈடுகொடுக்க கிம்பல் எனும் தொழில் நுட்பத்தை முழுக்க முழுக்க படத்தில் பயன்படுத்தியிருக்கிறேன். 40 கிலோ எடைகொண்ட கிம்பல் கேமரா உபகரணங்களை தோளில் சுமந்து கொண்டு முழுப்படத்தையும் எடுப்பது சிரமமாக இருந்தாலும்  படம் பார்க்கும்பொழுதுமகிழ்ச்சியாக இருந்தது.  பட்ட சிரமத்திற்கு பலன் கிடைத்திருக்கிறது.   கிராமத்து நிலமும் மக்களும் வாழ்வியலும் தினம் தினம் என்னை உற்சாகமூட்டியதும் ,தயாரிப்பாளர் பா. இரஞ்சித் அண்ணனின் ஒத்துழைப்பும், இயக்குனர் மாரிசெல்வராஜ் ஒத்துழைப்பும் சவாலான வேலையை செய்துமுடிக்க பெரும் உதவியாக இருந்தது. எந்த  இடத்திலும் அந்த நிலத்தின் கலர் மாறாமல் அதை அப்படியே கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோம். மனிதர்களோடு விலங்குகளும் இந்த படத்தில்நடித்திருக்கின்றன அவற்றை படம்பிடிக்க கிம்பல் போன்ற உபகரணம் பெரிதும் உதவியது. குடும்பத்தோடு பார்க்கக்கூடிய அழகான ஒரு படமாக வந்திருக்கிறது , திருநெல்வேலியின் நிஜ வெளிச்சத்தையும் , அழகையும்  இந்த படத்தில் பெரிதும் எதிர்பார்க்கலாம்” என்றார்  உற்சாகமாக.

என்னதான் காமெடி கலந்த பேய் படங்கள் வந்து கொண்டே இருந்தாலும் ரசிகர்களுக்கு அதை பார்த்து சலிப்பே ஏற்படுவதில்லை. இயற்கையாகவே, ரசிகர்கள் பேய்க்கு பயந்து நடுங்கும்...

ஒரு அம்மா செண்டிமெண்ட் படத்தை கொடுக்க முடிவு செய்திருக்கின்றார் விஜய் ஆண்டனி. அந்த படம் தான் காளி. அமெரிக்காவில் வாழும் டாக்டர் விஜய் ஆண்டனி. அமெரிக்காவில்...

தமிழ் சினிமாவுக்கு இந்த வருட துவக்கத்தில் 'வாங்க, கலகலனு சிரிச்சுட்டு போங்க' டைப்பில் முதல் படம்! வெள்ளைக்காரனிடமிருந்து தன் தாத்தா ஆட்டயப் போட்டு புதைத்து...

ஆர்.கே.சுரேஷ் நடித்து வரும் ‘பில்லா பாண்டி’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தில் தல அஜித் புகழ்பாடும் ஒரு பாடல் உள்ளதாம்....

  விமல் நடிப்பில் அடுத்ததாக வெளிவர தயாராகி வரும் படம் தான் ‘மன்னர் வகையறா’. இந்தப்படத்தை விமலின் சொந்த நிறுவனமான A3V சினிமாஸ் தயாரித்துள்ளது. விமலுக்கு நம்பிக்கை...

பிரபுதேவா - ஹன்ஸிகா நடிக்க கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் சார்பாக கோட்டப்பாடி.ஜே.ராஜேஷ் தயாரித்து இயக்குநர் S.கல்யாண் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வரும் திரைப்படம்’...