பெரும் விலைகொடுத்து வீரத்தை வாங்கிய இயக்குனர்!!

veeram_fl006

ஆரம்பம் படத்தை அடுத்து அஜீத் நடித்துள்ள வீரம் படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. விஜய்யின் ‘ஜில்லா’வும் பொங்கல் ரேசில் உள்ளது. இந்நிலையில் இரண்டு படங்களின் அனைத்து உரிமைகளும் வேகமாக வியாபாரம் ஆகி வருகிறது.

இதில் கொஞ்சம் முன்பாகவே ‘ஜில்லா’ படத்தின் வியாபாரம் முடிந்துவிட்டது. தியேட்டர் புக்கிங்கும் படுவேகமாக நடந்து வருகிறது.

தற்போது அஜீத் படத்தின் விநியோக உரிமை விற்பனை சூடு பிடித்துள்ளது. ஆரம்பம் படத்தின் பெரிய வெற்றி வீரம் பட வியாபாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை பெரிய ஏரியாக்களான சென்னை, NSC ஏரியா உரிமையை இயக்குனர் இராம நாராயணனின் ‘தேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளது. மற்ற ஏரியாக்களுக்கான வீரம் பட வியாபாரம் படுவேகமாக நடந்து வருகிறது.

7 ஆண்டுகளுக்கு முன்பு அஜீத்தின் ஆழ்வார் படத்துடன் விஜய்யின் போக்கிரி மோதியது. அன்று ஆழ்வார் படுதோல்வியைச் சந்தித்தது. போக்கிரி வசூலில் வெளுத்து வாங்கியது. இன்று என்ன நிலை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..