ஒரு வருட இடைவெளியில் விக்ரம் பிரபுவின் அடுத்த படம்!

Ivan-Vera-Mathiri-release-Poster

‘எங்கேயும் எப்போதும்’ படத்தை அடுத்து சரவணன் இயக்க, கும்கி படத்தை அடுத்து விக்ரம் பிரபு நடிக்க, திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் படம் “இவன் வேற மாதிரி”. இருவருக்குமே இது தான் இரண்டாவது படம். சுரபி, கணேஷ் வெங்கட்ராமன், வம்சி நடித்துள்ள இந்த படம் அடுத்த மாதம் 13ம் தேதி வெளியாகிறது. இப்படத்திற்கு அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான ‘யு’ சர்டிபிகேட் கிடைத்துள்ளது.

‘கும்கி’ படத்திற்குப் பிறகு சரியாக ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு விக்ரம் பிரபுவுக்கு இந்த படம் வெளியாகிறது. விக்ரம் பிரபுவின் திரையுலக வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கும் படமாக அமையும் என்று சொல்கிறார்கள்.