புதுப்படத்தை வீட்டிலிருந்தே சொகுசா பார்க்கணுமா??

pocket

வருடத்திற்கு 200க்கும் மேற்பட்ட படங்கள் தமிழில் உருவாக்கபடுகின்றன. அவற்றில் முக்கால்வாசி படங்கள் ரிலீஸ் ஆகின்றன. மீதி படங்கள் திரையரங்கு கிடைக்காமல் ரிலீஸ் ஆகியும் ஆகாமலும் இருக்கின்றன. இந்த ஆண்டு இதுவரையில் 17௦ படங்கள் வெளியாகியும் தேங்கி இருக்கும் படங்களின் எண்ணிக்கை 5௦-ஐ தாண்டுகிறது.

படம் எடுப்பது ஈசியாகவிட்ட இன்றைய நிலையில் படத்தை ரிலீஸ் செய்வது பெரும் சிரமமாகி விடுகிறது. இந்தப் பிரச்சினை தீர வழி சொல்கிறார் சிவகிரி. ஏற்கனவே சிவகிரி என்ற படத்தில் நடித்து தயாரித்தவர். லேட்டஸ்டாக இணையதளம் ஒன்றை துவங்கியிருக்கிறார். அந்த இணையதளத்தின் பெயர் pocketpopcorn.com ஆன்லைன் மல்ட்டிபிளக்ஸ். டிடிஎச்சில் காசு கட்டி படத்தை பார்ப்பது போன்று இந்த இணையதளத்திலும் பணம் கட்டி புதுப்படங்களை பார்க்கலாம்.

“படம் ரிலீஸ் ஆன ஓரிரு நாட்களிலேயே தயாரிப்பாளரிடம் உரிமம் பெற்று இந்த இணையதளத்தில் வெளியிட்டுவிடுவோம். இந்த இணையதளத்தில் படத்தை டிக்கெட் கட்டணம் மட்டும் செலுத்தி படத்தைப் பார்க்கலாம். இதனால் திரையரங்குகளுக்கு செல்லும் அலைச்சல், நொறுக்குத் தீனி செலவு, டென்ஷன் போன்றவற்றை அறவே இல்லாமல் சொகுசாக வீட்டிலோ அலுவலகத்தில் இருந்தபடியோ படத்தை ரிலாக்ஸாக பார்க்கலாம். ஒருவர் படம் பார்க்க கட்டணம் செலுத்தியதுமே அந்த பணத்தில் தயாரிப்பாளருக்கான தொகை உடனடியாக அவரது வங்கிக் கணக்குக்கு சென்றுவிடும்.

எந்தெந்த நாட்டில் வசிப்பவர்கள் படத்தைப் பார்க்க வேண்டும் என்பதை தயாரிப்பாளரே முடிவு செய்து கொள்ளலாம். படத்தின் லிங்குகளை வேறு இணையதளங்களில் இணைப்பதன் மூலம் ரசிகர்களும் பணம் ஈட்டலாம். இதனால் pocketpopcorn.com இணையதளம் படத்தை தயாரிப்பவர்களுக்கு மட்டுமில்லாமல் படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் பணம் சம்பாதித்துக் கொடுக்கும்” என்கிறார் சிவகிரி.