முன்கூட்டியே பிரியாணி விருந்து,, அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

biriya

கார்த்தி நடித்த இரண்டு படங்களில் அழகுராஜாவை தீபாவளிக்கும், பிரியாணி படத்தை பொங்கலுக்கும் வெளியிட தீர்மானித்திருந்தனர். ஆனால் இடையில் என்ன நடந்ததோ முன்கூட்டியே வெளியாகிறது பிரியாணி. ‘பிரியாணி’ படத்தில் கார்த்தியுடன் பிரேம்ஜி, ராம்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டுடியோகிரீன் அதிகாரப்பூர்வமாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் வரும் டிசம்பர் 20-ம் தேதி பிரியாணி வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு ரஜினியின் ‘கோச்சடையான்’, அஜித்தின் வீரம், விஜயின் ஜில்லா போன்ற படங்கள் வெளியாகின்றன. இவற்றுக்கெல்லாம் முன்பாகவே ‘பிரியாணி’ படத்தை போட்டியில்லாத சூழலில் வெளியாக வேண்டும் என்ற காரணத்தால், டிசம்பர்-20ந் தேதியே வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். அரையாண்டு விடுமுறையை மனதில் வைத்து இந்த படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.