சசிக்குமார் உதவியாளர் இயக்கும் “போர் செய்ய பழகு”!!

14 copy

மாஸ்டர் மூவி மேக்கஸ்’ என்ற புதிய பட நிறுவனம் சார்பில் உருவாகும் புதிய படம் போர் செய்ய பழகு. இயக்குநரும் தயாரிப்பாளருமான சசிகுமாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய எஸ்பி நரசிம்மன் இந்த படத்தை இயக்குகிறார்.

கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். யுத்தம் செய், ஆரோகணம், முகமூடி போன்ற படங்களுக்கு இசையமைத்த ‘கே’ இசை அமைக்கிறார். படத்திற்கான நடிகர்-நடிகைகள் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது நடந்து வருகிறது. விரைவில் படத்தின் மற்ற விவரங்கள் குறித்து அறிவிப்பேன் என இயக்குநர் எஸ்பி நரசிம்மன் தெரிவித்துள்ளார்.