ஆண்ட்ரியா தான் சிம்புவுக்கு கரெக்ட் மேட்ச்!

STR

சிம்பு, ஹன்சிகா காதல் நல்லா போயிட்டிருக்கும் போது, திடீரென ஆண்ட்ரியா தான் சிம்புவுக்கு சரியான ஜோடி என பரபரப்பை கிளப்பியுள்ளார் நடிகர் விடிவி கணேஷ். ஆனால் இது படத்துக்கு என்று பின்னர் தான் தெளிவாக கூறியுள்ளார். ஆம்

விண்ணை தாண்டி வருவாயா படத்தில் சிம்புவுடன் நடித்தார் கணேஷ். தொடர்ந்து சிம்புவுடன் பல படங்களில் நடித்தவர் இப்போது அவரே சொந்தமாக ‘இங்க என்ன சொல்லுது’ என்ற படத்தை தயாரித்து, அந்த படத்தின் மூலம் ஹீரோவாகவும் களம் இறங்கியுள்ளார். இப்படத்தில் கணேஷ் ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார்.

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்புவும் நடிக்கிறார். இந்தப்படத்தில் சிம்புவுக்கு ஏற்ற ஒரு ஹீரோயினை (கெஸ்ட் ரோலுக்கு எதுக்கு ஹீரோயின் எல்லாம்??, இதையே தான் நானும் கேக்கறேன்) பலமாதமாக தேடி வந்த கணேஷ், இப்போது ஆண்ட்ரியாவை சிம்புவுக்கு ஜோடியாக்கியுள்ளார்.

இதுகுறித்து கணேஷ் கூறும்போது, “சிம்புவுக்கு ஏற்ற சரியான ஜோடி ஆண்ட்ரியா தான். என் பார்வையில் அவர்களது ஜோடி ஒரு உற்சாகமான ஜோடியாகவே தெரிகிறது. ரசிகர்களுக்கு இந்த ஜோடி ரொம்ப பிடிக்கும்.

படத்தில் அவர்களுக்கான கேரக்டரும் அவர்களுக்காகவே உருவாக்கப்பட்டது போன்று பொருத்தமாக இருக்கிறது.

தற்போது ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தமாத இறுதியில் படத்தை பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.