கொசுவால் வரும் பிரச்சினைகளை பாடும் “கூறுகெட்ட கொசுவே”!!

mugam

தமிழ் சினிமாவில் நண்பர்களின் ஆழமான நட்பு குறித்து பல படங்கள் வெளிவந்திருக்கின்றன. சென்னை புரொடஷன் சார்பில் எழில் இனியன் பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கிற ‘முகம் நீ அகம் நான்’ படமும் இரு நண்பர்களின் ஆழமான நட்பை வித்தியாசமான கோணத்தில் சொல்கிறது. புதுமுக ஹீரோவாக சங்கர் சீனிவாசன் நடித்திருக்கிறார். நாயகியாக ஹாசினி(ஷரிகா) நடித்திருக்கிறார். மகேஷ், கஞ்சா கருப்பு, ஆன்ட்ரூஸ், பயில்வான் ரங்கநாதன், அல்வா வாசு, தேனி முருகன், சுந்தரி, ஒய்விஎஸ், பாய்ஸ் ராஜன், மோகனபிரியா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகும் மோகன்ஜி ஒவ்வொரு பாடல்களிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார். ‘மழைத்தூறலிலே’ என்ற மெலோடி பாடல் இந்தாண்டின் சிறந்த மெலோடி பாடலாக தேர்வு பெறும் என்று பாடலை கேட்ட அனைவரும் கூறுகிறார்கள்.

புஷ்பவனம் குப்புசாமி தனது கணீர் குரலில் ‘கூறுகெட்ட கொசுவே’ என்ற பாடலை பாடியிருக்கிறார். இந்த பாடலில் கொசுவால் ஏற்படுகிற பல பிரச்னைகளை அலசியிருக்கிறார்கள். ஒரு விழிப்புணர்வையும் அதேநேரம் பல உண்மைகளையும் இந்த பாடலில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த பாடலை இசையமைப்பாளர் மோகன்ஜியே எழுதி இசையமைத்திருக்கிறார். ரா.நா.சரவணன் இந்த படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் மிக விரைவில் திரைக்கு வர இருக்கிறது.