என் மனைவியை மட்டும் தான் காதலிக்கிறேன் – சிவகார்த்திகேயன் விளக்கம்!!

1001938_317238465089612_545724033_n

மெரினாவில் அறிமுகமாகி எதிர்நீச்சல் போட்டு படிப்படியாக நிரந்தர இடத்தை பிடிக்க உழைத்து கொண்டிருக்கும் இளம் ஹீரோ சிவகார்த்திகேயன். இப்படி பலபேர் நினைத்து கொண்டிருக்க திடீரென இளம் நடிகை ஒருவருக்கும், சிவ கார்த்திகேயனுக்கும் இடையே காதல் என்று ஒரு செய்தி காட்டுத்தீ போல கோடம்பாக்கத்தில் பரவி வருகிறது. சிவகார்த்திகேயன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் அவரை இந்த செய்தி மிகவும் அதிர்ச்சிகுள்ளாக்கியது.

இதனாலேயே தன் மனைவியை எந்தவொரு பட விழாவுக்கும் அழைத்து வருவதில்லை. வீட்டுக்குள்ளே ஹவுஸ் அரெஸ்ட் மாதிரி வைத்திருக்கிறார் என்றும் அரசல் புரசலாக செய்திகள் கிளம்பின.

இதனை பற்றி பேசுவதற்காக சிவகார்த்திகேயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, “அந்த மாதிரி செய்திகள் வருவது வருத்தமளிக்கிறது. அந்த நடிகை  நான் நடித்த படத்தில் ஒரு ஹீரோயினாக நடித்தார். அவ்வளவுதான். இதை வைத்துகொண்டு தவறான வதந்திகளை சிலர் பரப்பி விட்டுவிட்டனர்.

1238372_665456773465861_1418061075_n

மேலும் என் மனைவியுடன் எனக்கு எந்தவித சண்டையோ, பிரச்சினையோ கிடையாது. நங்கள் இருவரும் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம். இன்று எங்கள் வாழ்வில் மிகவும் முக்கியமான நாள். எங்கள் திருமண நாள். இந்த நாளில் இந்த விஷயத்தை தெளிவுபடுத்துவதை சந்தோஷமாக கருதுகிறேன். எனவே இது மாதிரி செய்திகள் வந்தால் யாரும் நம்ப வேண்டாம். நான் என் மனைவியை மட்டுமே காதலிக்கிறேன்.

மேலும் இது குறித்து பத்திரிக்கை நண்பர்கள் ஏதேனும் தகவல் பெற விரும்பினால் எனது மொபைல் எண்ணுக்கு உங்கள் பெயரையும், மீடியாவையும் ஒரு எஸ்.எம்.எஸ். செய்து விட்டு அழையுங்கள். அல்லது நானே திரும்ப அழைக்கிறேன். ஏனெனில் நிறைய ஸ்பாம் கால்கள் வருகின்றன. மிக்க நன்றி” என்றார்.

தற்போது சிவகார்த்திகேயன் சென்னையில் வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள ஒரு அப்பார்ட்மென்ட்டில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார் என்பதும், இன்று அவர்களின் மூன்றாம் வருட திருமண நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.