மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் விஜய், காஜல் அகர்வால்!

Kajal Agarwal and Vijay Photo Shoot for Thuppakki

விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடிப்பில் சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் ஜில்லா. புது இயக்குனர் நேசன் இயக்குகிறார். டி.இமான் இசையமைக்கிறார். ஏற்கனவே இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது.

தற்போது ஜில்லா படத்திற்கான மூன்றாம் கட்ட படிப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது. நடிகர் விஜய், காஜல் அகர்வால், சூரி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

படம் குறித்து இயக்குனர் கூறும்போது, “சென்னையில் நடக்கவுள்ள ஷூட்டிங்கில், ஹீரோ, ஹீரோயின் முதன் முதலில் சந்திக்கும் காட்சி எடுக்கப்படவுள்ளது. இது தவிர, படத்தில் புரோட்டா சூரியை வைத்து எடுக்கப்படவுள்ள காமெடி சீன்களும் சென்னையில் ஷூட் செய்யப்படவுள்ளது” என்றார்.

அடுத்த வருடம் (2014) பொங்கலில் ஜில்லா படம் வெளியாக இருக்கிறது.