‘3’ படத்தில் பிரிந்த ஜோடி மீண்டும் சேருது!

998892_558122370890659_1854974747_n

தனது 30-வது பிறந்த நாளைக் கொண்டாட லண்டனுக்குச் சென்ற தனுஷ், தனது பிறந்த நாள் அன்று ஒளிப்பதிவாளரை இயக்குனராகவும் அறிமுகம் செய்து வைத்தார். ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘3’, தற்போது ‘நய்யாண்டி’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்து வரும் வேல்ராஜை இயக்குனராக்கி படம் தயாரிக்கத் திட்டமிட்டு இருக்கிறார் தனுஷ்.

இப்படத்தில் தனுஷே நாயகனாக நடிக்கிறார். தனுஷிற்கு ஜோடியாக ‘3’ படத்திலிருந்து விலகிய அமலா பால் நடிக்கிறார். இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார் அனிருத்.  தனது ‘வுண்டர்பார் நிறுவனம்’ மூலம் தயாரிக்கிறார் தனுஷ். விரைவில் இப்படத்தின் தலைப்பு மற்றும் FIRST LOOK வெளியிடப்படும் என்று அறிவித்து இருக்கிறார் தனுஷ்.