ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் மோனிகா ஜாட்டை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நவல்கர் பகுதியை சேர்ந்த மோனிகா ஜாட் என்பவர் பௌரவ் கலார் என்பவருடன் சேர்ந்து மோசடி செய்து தேர்ச்சி பெற்றதாக கூறப்படுகிறது.
கடந்த 2021 செப்டம்பர் 15ஆம் தேதி அஜ்மீரில் நடைபெற்ற சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு முன்பாகவே பௌரவ் கலார் ப்ளூடூத் வழியாக மோனிகாவிற்கு வினாத்தாள்களை வழங்கியுள்ளார். இதனால் அந்தப் பெண் ஹிந்தியில் 200 மதிப்பெண்களும், பொது அறிவில் 184 மதிப்பெண்களும் பெற்ற நிலையில் நேர்காணலில் வெறும் 15 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். இருப்பினும் எழுத்து தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதால் அவர் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் SOG பௌரவ் கலாரை கைது செய்த போது மோனிகா பயிற்சி மத்திய நிலையமான ஜெய்ப்பூரில் தலைமறைவாகியது தெரியவந்தது. மேலும் இதைத் தொடர்ந்து காவல் துறையினர் ஜூன்ஜூனு காவல் நிலையத்தில் பயிற்சியாளராக இருந்த மோனிகாவை கடந்த மார்ச் 18 ஆம் தேதி கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது