உத்திர பிரதேசத்தை சார்ந்த பிரஜ்பால் சிங் (Brijpal Singh) மற்றும் அவரது மனைவி சோனியா சிங் (Sonia Singh) ஆகிய தம்பதியினர், குழந்தை பெறும் ஆசையில் வேலைக்காரியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குஷிநகர் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண், ரூ.10,000 சம்பளத்தில் சமையல் வேலை கிடைக்கும் என்று கூறி இந்த தம்பதியினரால் வேலைக்காக அழைக்கப்பட்டார். ஆனால், பின்னர் சோனியா சிங் தனது கணவருடன் உடலுறவில் ஈடுபடுமாறு வேலைக்காரியை கட்டாயப்படுத்த முயன்றதாக புகார் கூறப்பட்டுள்ளது.
வேலைக்காரி இந்த திடீர் கோரிக்கையை மறுத்தபோது, சோனியா சிங் இரவு நேரங்களில் மது அருந்திய நிலையில், அவளை கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பின்னர் அவரது கணவரை வேலைக்காரியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ய தூண்டியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண் அதற்கு சம்மதிக்காததால் அடுக்குமாடி குடியிருப்பு வேறொரு பகுதியில் சொந்தமாக வாங்கி தருவதாக ஆசைகளை காட்டியுள்ளனர் .ஆனால் அதற்கும் அவர் ஒப்புக் கொள்ளாததால் அந்த பெண்ணை ஒரு அறைக்குள் தொடர்ந்து வைத்து ஆபாச வீடியோக்களை பதிவு செய்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.
சில நாட்களாக இந்த கொடுமையை அனுபவித்த அந்த பெண் எப்படியோ தப்பித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த சம்பவம் கடந்த வருடம் ஜூன் மாதம் நடந்தது என்ற காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் கணவன் மனைவி இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையில் அவர்கள் கைது செய்யப்படாததால் தற்போது தலைமுறைவாக உள்ள அவர்களைப் பற்றி தகவல் தெரிவித்தால் பத்தாயிரம் ரூபாய் சண்மானம் வழங்கப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.