மனைவி டார்ச்சர் தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயன்ற கணவன்: வைரலாகும் வீடியோ!

உத்தரப்பிரதேசத்தின் முசஃபர்நகர் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் என்ற நபர், தனது மனைவி ஜோதி மற்றும் குடும்பத்தினர் தன்னை போலிச் வழக்குகளில் சிக்கவைத்து ₹12 லட்சம் வரை வேண்டும் எனக் கூறி, தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்துள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள இந்த வீடியோவில், “எங்கேயிருந்து நான் இந்த பணத்தை வாங்குவது? நான் உயிரோடே இருக்க விரும்புகிறேன், ஆனால் எனக்கு வேறு வழியில்லை,” என உருக்கமாக கூறி இருக்கிறார். மேலும், மனைவி தொடர்ந்து தன்னைத் துன்புறுத்தி வருவதால, தனக்கு வாழ வழியில்லை என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து, ராகுல் விஷம் குடித்துக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி, மீடியா மற்றும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் பலரும் “ஆண்கள் வெளிப்படையாக பேச முடியாததால், அவர்களின் பிரச்சனைகள் கவனிக்கப்படுவதில்லை” என கருத்து பதிவிட்டுள்ளனர். முசஃபர்நகர் போலீசார் தற்போது வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? என்பதை அனைவரும் எதிர்பார்க்கும் கேள்வியாக உள்ளது.

https://x.com/SachinGuptaUP/status/1901319872744960389?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1901319872744960389%7Ctwgr%5E0f7a5ea58e011ba4003c1dfc9ef3bb37c55bf237%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F

Leave a Response