நீ விஜய் ரசிகனாக இரு! ஆனால் திமுக தொண்டனாக மாறு! த மோ அன்பரசன் பேச்சால் பரபரப்பு!

திமுக கட்சியின் அமைச்சர் த.மோ. அன்பரசன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது நடிகர் விஜய் பற்றி பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது.

இது பற்றி அவர் கூறியதாவது, நம்முடைய எல்லோர் வீட்டிலும் கண்டிப்பாக விஜய் ரசிகன் என்று ஒருத்தன் இருப்பான். அப்படி இருந்தால் அவனுக்கு சோறு கூட போடாதீங்க. உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும் பரவாயில்லை. உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு நீங்கள் அட்வைஸ் கொடுங்கள். நீ விஜய் ரசிகனாக இரு பரவாயில்லை. ஆனால் கட்சின்னு வந்துட்டா திமுகவுக்கு மட்டும் ஆதரவு கொடு என்று கூறுங்கள் என்று திமுக தொண்டர்களுக்கு அவர் அட்வைஸ் சொன்னார்.

மேலும் முன்னதாக தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜய் சமீபத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு நேரடியாக திமுகவின் பெயரை குறிப்பிட்டு அவர்களை 2026 ஆம் ஆண்டு வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார். இதற்கு திமுகவினர் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது அமைச்சர் அன்பரசன் விஜய் ரசிகர்களுக்கு சோறு கூட போடக்கூடாது என்று சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response