நல்ல வேலை கிடைக்காதால் மன உளைச்சலில் இருந்த அண்ணன்: தம்பிக்கு கல்யாணமாக வேண்டும் என்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம்!

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மணிபாரதி (27) என்பவர் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றிருந்தார்.

பல முயற்சிகளுக்குப் பிறகும், தனது படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காததால், தற்காலிகமாக சில நிறுவனங்களில் பணிபுரிந்தார். ஆனால் நிலையான மற்றும் விருப்பமான வேலை கிடைக்காமல் மணிபாரதி மன உளைச்சலில் இருந்தார். இந்த நிலையில், மணிபாரதியின் தந்தை விஜயகுமார், “நீ இன்னும் நல்ல வேலைக்கு செல்லவில்லை, உன் தம்பிக்கும் திருமணம் செய்ய வேண்டியிருக்கிறது, இனி என்ன செய்யப்போகிறாய்?” என்று கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மாடிக்கு சென்ற மணிபாரதி, “தான் இருந்தால் தம்பிக்கு திருமணம் செய்ய முடியாது, நான் போனால் பெற்றோர் அவனுக்குத் திருமணம் செய்து வைப்பார்கள்” என்ற எண்ணத்துடன், வீட்டின் மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று மணிபாரதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response