முன்விரோதம்.. தூக்கி வீசப்பட்ட பெண்: கர்நாடகாவில் பரபரப்பு!

கர்நாடக மாநிலம் மங்களூரில் சதீஷ் என்ற நபர், தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் முரளி பிரசாத்தை கார் மூலம் மோதித் தாக்க முயன்றார்.

முரளி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது. அதே நேரத்தில், பாதையில் நடந்து சென்ற ஒரு பெண் மீதும் கார் மோதியது. இந்த விபத்தில் அந்த பெண் தூக்கி வீசப்பட்டு ஒரு வீட்டின் சுவரில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பெண்ணும், முரளியும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சதீஷை கைது செய்துள்ளனர். விசாரணையின் போது, அவர் முரளியின் மீது முன்விரோதம் காரணமாக தாக்குதல் நடத்தியது உறுதி செய்யப்பட்டது. சதீஷ் ஏற்கனவே முரளியின் தந்தையை தாக்க முயன்றுள்ளார். இதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து விபத்தை ஏற்படுத்திய சதீஷை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

https://x.com/TeluguScribe/status/1900463361092993427?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1900463361092993427%7Ctwgr%5E5e923ee8b71d4f1c2815bc49898837d20adc5814%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F

Leave a Response