சாலை விதிகளை மீறிய புதிய தலைமுறைகள்!

மும்பையின் தானே (மேற்கு) பகுதியில், பள்ளி மாணவர்கள் மகிந்திரா XUV700 காரை இயக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் 12, 2025 அன்று Safecars_India என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிடப்பட்ட இந்த வீடியோவில், 8 அல்லது 9ம் வகுப்பு (12-13 வயது) மாணவர்கள் காரை இயக்கிக்கொண்டே சூரியக் கண்ணாடி (sunroof) வழியாக தலையை வெளியே போட்டு பார்த்து கொண்டு இருப்பதை வீடியோவில் காண முடிந்தது. இதைப் பார்த்து கடந்து சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ இணையத்தில் 12.5 மில்லியன் பார்வைகளை கடந்து, சாலை பாதுகாப்பு மற்றும் பெற்றோர்களின் பொறுப்பின்மை குறித்து கடுமையான விவாதங்களை உருவாக்கியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. பலரும் “மோசமான பெற்றோர்”, “சாலை விதிகளை மதிக்காத புதிய தலைமுறை” என கடுமையாக விமர்சிக்க, சிலர் “இந்த வாகனத்தைப் பிடித்து அபராதம் விதிக்க வேண்டும்”, “குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு கார் பறிமுதல் செய்யப்பட வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், “குழந்தைகள் மட்டுமல்ல, அருகில் நடந்து செல்லும் மாணவர்களுக்கும் இது பெரிய அபாயம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சாலை பாதுகாப்பு விதிகளை மீறினால் என்ன அபாயங்கள் ஏற்படலாம் என்பதற்கான முடிவில்லா அசம்பாவிதங்களின் ஒரு எடுத்துக்காட்டாக பலரும் கருதுகின்றனர்.

Leave a Response