பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தின் நௌகாச்சியாவில் உயர்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இங்கு நடந்த பாஜக கூட்டணியின் ஹோலி கொண்டாட்டத்தின் போது ஆளும் ஜேடியு (JDU) கட்சி எம்எல்ஏ கோபால் மண்டல் (மேடையில் ஆபாசமான பாடல்களை பாடி நடனமாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பாடகி சாய்லா பிஹாரி (Shaila Bihari) நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தபோது, மேடையேறிய எம்எல்ஏ, மைக்கை பிடித்து பெண்களை அவமதிக்கும் விதமாக ஆபாச பாடல்களை பாடினார். அதை தொடர்ந்து, மேடையில் இருந்த ஒரு பெண் நடனக் கலைஞரை கை பிடித்து வலுக்கட்டாயமாக நடனமாடச் செய்து, அவரின் கன்னத்தில் 500 ரூபாய் நோட்டை ஒட்டவைத்தார்.
மேலும், கூட்டத்தில் பேசிய கோபால் மண்டல், “நான் தினமும் நடனமாடுகிறேன், தினமும் முத்தமிடுகிறேன்” என்ற கதறலான கருத்துகளை வெளியிட்டார். “எனது நடன வீடியோக்கள் வைரலாகி, முதலமைச்சர் நிதிஷ் குமார் (Nitish Kumar) என்னை கடிந்து கொள்கிறார், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்” எனும் வகையிலான சர்ச்சைக்குரிய அறிக்கையையும் வெளியிட்டார். இது சமூக ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் பகிரப்பட்டு, பல்வேறு தரப்பினரிடையே கடும் கண்டனங்களை உருவாக்கியுள்ளது.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சி ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) எம்எல்ஏ கோபால் மண்டலை கடுமையாக விமர்சித்துள்ளது. அதாவது “இவ்வாறான மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு ஒரு மோசமான உதாரணமாக மாறுகின்றனர், இவர்களுக்கு தக்கதண்டனை வழங்க வேண்டும்” என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், சமூக ஊடகங்களில் பலரும், “எம்எல்ஏ போன்ற பதவியில் இருப்பவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லையா?” எனக் கேள்வி எழுப்பி, அரசும், நீதிமன்றமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
https://x.com/ShriDhiraj/status/1899481789024116929?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1899481789024116929%7Ctwgr%5E70eaf67a32ec63d1171b0770c0e933c03146fb06%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F