ஜோதிடரால் எலி மருந்து சாப்பிட்ட மனைவி மற்றும் மகன்கள்!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஒரு பெண் தனது இரண்டு மகள்களுடன் , எலிபேஸ்ட் (எலி மருந்து) தின்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் விரைந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்திற்குப் காரணமாக, ஜோதிடரான அந்த பெண்ணின் கணவர், பூபதிராஜா மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளனர்.

42 வயதான பூபதிராஜன், ஜோதிடராக பணியாற்றி வந்த நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். அவரது மனைவி புவனேஸ்வரி (35). தினமும் பூபதி ராஜன் தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும் “உயிரோடு வாழ வேண்டாம், செத்துவிடுங்கள்” என திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பெண், தனது இரண்டு மகள்களான 14 மற்றும் 12 வயது சிறுமிகளுடன், கடந்த 6ம் தேதி இரவு எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

அடுத்த நாள் காலை புவனேஸ்வரியும், அவரது மகள்களும் மயங்கி கிடந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் அவர்களை தீவிர சிகிச்சை அளித்ததால், மூவரும் உயிர் பிழைத்தனர். இதற்கிடையே போலீசார் பூபதிராஜனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Response