கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம், ஒலேநரசிப்புரா தாலுகா மாகவள்ளி கிராமத்தை சேர்ந்த ரவி என்பவர், தனது மனைவி லாவண்யாவிற்காக உயிரை துறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்ட ரவி, தனது குடும்பத்திற்காக பொக்லைன் எந்திர டிரைவராக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில், ரவியின் உறவினரான பிரதீப் அடிக்கடி அவரது வீட்டுக்கு வரத் தொடங்கினார். இந்த சந்திப்புகள் தொடர்ந்ததால், லாவண்யாவுக்கும் பிரதீப்புக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியது.
இதுகுறித்து கணவர் ரவி தனது மனைவியிடம் விசாரணை நடத்தியும், கண்டித்தும், இருவரும் தங்களது உறவை கைவிடாமல் தொடர்ந்து சந்தித்து வந்தனர். இதனால், லாவண்யா கர்ப்பமாகி, பின்னர் ஒரு ஆண் குழந்தைக்கு தாய் ஆனார். குழந்தையின் தந்தை குறித்து சந்தேகம் கொண்ட ரவி, மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். கடந்த மாதம் ஏற்பட்ட ஒரு சண்டையின் போது, லாவண்யா, “இந்தக் குழந்தை உனக்குப் பிறக்கவில்லை” என்று ரவியிடம் கூறிவிட்டு, தனது குழந்தையை தூக்கிக்கொண்டு கள்ளக்காதலனுடன் தப்பிச் சென்றார்.
மனைவி மற்றும் குழந்தையை பல இடங்களில் தேடியும் கிடைக்காமல், மனவேதனை அடைந்த ரவி, வீட்டிற்கு அருகே ஓடும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த ஒலேநரசிப்புரா புறநகர் போலீசார், தீயணைப்பு படையினரின் உதவியுடன் அவரது உடலை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரவியின் தற்கொலைக்குக் காரணமான லாவண்யா மற்றும் பிரதீப்பின் நடவடிக்கைகள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.