அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை அவருடைய வீட்டில் சென்று சந்தித்தார்.
அதன் பிறகு வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக வந்தேன். வேறு எதுவும் காரணங்கள் கிடையாது. எடப்பாடி பழனிச்சாமியிடம் இரட்டை இலை சின்னம் இருப்பதால் தற்போது ஜெயலலிதாவின் கட்சி நாளுக்கு நாள் பலவீனம் அடைந்து கொண்டே செல்கிறது. ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்பாளர்கள்.
எடப்பாடி பழனிச்சாமியிடம் இருக்கும் நிர்வாகிகளும் தொண்டர்களும் விழித்துக் கொள்ளவில்லை எனில் தேர்தலுக்குப் பிறகு கட்சியை மீட்டெடுக்கக்கூடிய பொறுப்பு எங்களுக்கு வரும். நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம் இனியும் அதில் மட்டும் தான் தொடரும் என்று கூறினார். நேற்று ஓபிஎஸ் அணியில் இருக்கும் வைத்திலிங்கத்தை சசிகலாவும் சந்தித்து பேசினார். அவர் அதிமுக தொண்டர்கள் அனைவரையும் மீண்டும் ஒன்றிணைக்க செயல்பட்டு வருவதாக கூறிவரும் நிலையில் டிடிவி தினகரனும் அவரை சந்தித்துள்ளார். மேலும் இது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் கண்டிப்பாக அவர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.