சாமி கும்பிட போன இடத்தில் நேர்ந்த சோகம்! குடும்பமே வேதனை!

வேலூர் மாவட்டம் பரவக்கல் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் வெல்டிங் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் செந்தில்குமார் சாமி கும்பிடுவதற்காக தனது உறவினர்களுடன் குலதெய்வ கோவிலுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தபோது அரச மரத்தின் கீழ் கற்பூரம் ஏற்றியுள்ளனர். அப்போது அரச மரத்தில் இருந்த தேனீ கூடு கலைந்து அனைவரையும் ஓட ஓட விரட்டி கொட்டியது. இதனால் படுகாயமடைந்த செந்தில் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் தேனீ கொட்டியதால் 11 பேர் காயம் அடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் 11 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த செந்தில்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response