பஸ்ஸிலும் பிளாக் டிக்கெட் விற்பனையா? அடேங்கப்பா!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் பெண்களுக்கு மகாலட்சுமி டிக்கெட் எனப்படும் இலவச டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆண் பயணி ஒருவர் TSRTC பேருந்தில் பயணித்துள்ளார். அவர் ECIL லிலிருந்து அப்சல்கஞ்சிற்க்கு செல்வதற்காக நடத்துனரிடம் டிக்கெட் கேட்டபோது அவருக்கு “மகாலட்சுமி டிக்கெட்”வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நடத்துனர் பயணியிடம் ரூபாய் 30 வசூலித்ததாக கூறப்படுகிறது.

பயணி இது குறித்து கேட்டபோது டிக்கெட் இயந்திரம் பழுதடைந்து விட்டதாக நடத்துனர் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தை தொடர்ந்து இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு இலவச டிக்கெட் குறித்த கேள்வியினை மக்கள் பலரும் எழுப்பியுள்ளனர். இதனிடையில் TSRTC போக்குவரத்து துறை தனது இணையதள பக்கத்தில் தெரிவித்ததாவது”இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடும் நடத்துனர்கள் குறித்து எங்களுக்கு புகார் அளித்ததற்கு நன்றி” என தெரிவித்திருந்தது.

https://x.com/TeluguScribe/status/1898273522696470730?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1898273522696470730%7Ctwgr%5E0094985b1c01e0793fd4a02cfe04b0caa606921a%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F

Leave a Response