திமுக ஆட்சி களைக்கப்படும். மிரட்டல் விடுக்கிறாரா சுப்ரமணியசுவாமி?

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஏழை மாணவ,மாணவியர் இந்தி படிப்பதை தடுத்து நிறுத்தினால், 356வது சட்டப்பிரிவு படி திமுக ஆட்சி கலைக்கப்படும் என முன்னாள் மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான, சுப்பிரமணியன் சுவாமி மிரட்டல் விடுத்துள்ளார்.

இன்று அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் விடுத்துள்ள சிறிய அறிக்கையில், ஹிந்தி படிக்கும் தமிழர்களை திமுக தடுத்து நிறுத்த முடியாது,அப்படி தடுத்து நிறுத்தினால் திமுக அரசாங்கம் ஆர்ட்டிகள் 356 ஐ பயன்படுத்தி கலைக்கப்படும், நான் மத்திய அமைச்சராக இருந்த பொழுது 1991 ஆம் ஆண்டு சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக பதவி வகித்தேன்,அப்போது விடுதலைப்புலிகள் தொடர்பு திமுகவுக்கு இருந்ததால் என்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி ஆட்சியை கலைத்தேன்,பிறகு நடைபெற்ற தேர்தலில் வெறும் இரண்டு எம்எல்ஏக்கள் மட்டுமே திமுகவினர் பெற்றனர் என திமுகவை மிரட்டும் தொணியில் சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கருத்தை பார்த்த திமுக வினர் மிகுந்த எரிச்சலடைந்துள்ளனர்.

Leave a Response