தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது தொண்டர்களுக்காக ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் பாஜக அண்ணாமலையை மறைமுகமாக சாடியுள்ளார்.
அதாவது அறிவாலயத்தின் செங்கலை உருவாமல் நான் தமிழ்நாட்டை விட்டு போகமாட்டேன் என்று அண்ணாமலை கூறி இருந்த நிலையில் இதற்கு திமுக தலைவர்கள் பலரும் செங்கலை இல்ல ஒரு புல்லை கூட புடுங்க முடியாது என கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலினும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக மக்கள் மத்தியில் திமுகவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு என்பது பெருகிவரும் நிலையில் இந்த வெற்றிக்கு தொண்டர்களாகிய நீங்கள் தான் காரணம். ஆட்சியில் மக்கள் நலனுக்கான திட்டங்களை அறிவித்து அயராது உழைக்கிற காரணத்தினால் தான் மக்களிடம் ஆதரவு என்பது தொடர்ந்து பெருகிவரும் நிலையில் திமுக மீண்டும் ஆறாவது முறையாக ஆட்சி அமைத்ததற்கும் நீங்கள் மட்டும் தான் காரணம்.
200 தொகுதிகள் இலக்கு என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் ஒவ்வொரு தொகுதியிலும் அதற்கான திட்டங்களை தீர்மானித்து செயல்பட வேண்டும். திமுக கழகம் என்ற 75 ஆண்டுகால இயக்கத்தின் உறுதிமிக்க கட்டுமானம் மேலும் வலுவுடனும் பொலிவுடனும் திகழ்வதற்கான சீரமைப்பு நடவடிக்கை.
கருணாநிதியின் சிந்தனைகள் மற்றும் செயலில் உருவான கட்சியின் கற்கோட்டையான அறிவாலயத்தில் இருந்து செங்கலை உருவலாம் என சிலர் கனவு காண்கிறார்கள். தரையில் விழுந்து தலையில் அடிபட்ட பின் கனவு கலைந்து விழித்துக் கொள்ளலாமே தவிர அறிவாலயத்தின் ஒரு துகளை கூட எவராலும் அசைக்க முடியாது என்பதுதான் திமுகவின் பெருமைமிக்க வரலாறு என்று கூறியுள்ளார்.