டெல்லி – சென்னை இடையேயான ஏர் இந்தியா விமானத்தில், பிசினஸ் வகுப்பு இருக்கையை முன்பதிவு செய்திருந்த தனக்கு, எந்தவித முன்னறிவிப்பும் விளக்கமும் இன்றி, சாதாரண வகுப்புக்கு இருக்கை மாற்றப்பட்டதாக திமுக எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், “ஒரு எம்.பி-யை இப்படி நடத்துபவர்கள்…” ‘ஒரு எம்.பி.யை இப்படி நடத்துபவர்கள், மற்ற பயணிகளை எப்படி நடத்துவர் என நினைக்கும்போதே நடுங்கிறது.
பயணிகளின் உரிமைகள் மற்றும் சேவைத் தரங்களை இப்படி அலட்சியம் செய்வது அதிர்ச்சியளிக்கிறது. உடனடியாக மத்திய துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார்.
https://x.com/AIADMKITWINGOFL/status/1890302156756177160?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1890302156756177160%7Ctwgr%5E20ed72b6f309b80045e2ead7e0c51926b0a7db1f%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F
இந்நிலையில், அதிமுகவின் ஐடி விங்க் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “அதாவது, இந்த எம்.பி.யோட “பிசினஸ் கிளாஸ்” டிக்கெட்டை “பிரீமியம்” எக்கானாமியா மாத்திட்டாங்களாம்…
நம்ம எடப்பாடியார் லாம் ரயில், விமானம் ன்னு எதுல போனாலும் சொந்த காசுல மக்களோட மக்களா தான் போறாரு… ஆனா, நாட்டு மக்கள் வரிப்பணத்துல போறவங்க பிரச்சனைகளை தான் பாருங்களேன்…
“எங்க பிரச்னைகளை என்றைக்காவது இவ்ளோ FORCE-ஆ பேசிருக்கீங்களா மேடம்?” என்பதே தென்சென்னை மக்களின் கேள்வி” என்று தெரிவித்துள்ளது.