தமிழக முதல்வர் ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவருடைய அலுவலகத்திற்கு நேரில் சென்று சந்தித்தார்.
அப்போது வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினிடம் முக்கிய கோரிக்கை வைத்தார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும் போது திருமாவளவன் மற்றும் உதயநிதி இருவரும் இருந்தனர்.
அப்போது இருவருக்கும் நடுவே ஒரு நாற்காலி இருந்தது. இந்த போட்டோவை ஜெயக்குமார் தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு ஸ்டாலின் அலுவலகத்தில் இருக்கும் பெரியார் புகைப்படத்தை குறிப்பிட்டு திருமாவளவனை விட்டு உதயநிதி ஸ்டாலின் ஒதுங்கி இருப்பது ஏன் என்கிற விதத்தில் அவர் இவ்வளவு இடைவெளி ஏன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் திமுகவினர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
https://x.com/djayakumaroffcl/status/1888946932577689855?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1888946932577689855%7Ctwgr%5Ee1cddcdfd080d655d387e9f308f8ca56004490c2%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F