டெல்லி தலைமைச் செயலகத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை இழந்த நிலையில், ஆவணங்களை வெளியே எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கணினி, ஹார்டுடிஸ்க் உள்ளிட்டவற்றையும் பத்திரமாக வைத்திருக்க உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அமைச்சர்களின் அலுவலகங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இது நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துணைநிலை ஆளுநரின் உத்தரவைத் தொடர்ந்து பொது நிர்வாகத் துறையின் அனுமதியின்றி, தலைமைச் செயலகத்துக்குள் யாரும் நுழைய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.