திமுக மீதான நம்பிக்கை தலித் மக்களுக்கு போய்க் கொண்டிருக்கிறது : பூவை ஜெகன் மூர்த்தி.

திருப்பரங்குன்றத்தில் இந்து இஸ்ஸாமிய மக்கள் ஒற்றுமையாக இருப்பதை மதக்கலவரமாக மாற்ற யாரோ நினைப்பதாகவும், பெரியார் கொள்கைகளை கடைபிடித்து பேசி வந்த சீமான் தற்போது பெரியாருக்கு எதிராக பேசுவது அவருக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என தெரியவில்லை என புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி கூறியதாவது:

தமிழகத்தை பொறுத்தவரையில் எந்த துறையாக இருந்தாலும் அதில் பல்வேறு பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக எந்த ஆட்சியிலும் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு தற்பொழுது திமுக ஆட்சியில் தலித் மக்களுக்கு எதிராக பல கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றது. அதற்கு உதாரணம் ஒன்று வேங்கைவயல் மலம் கலந்த குடிநீர் குடித்துவிட்டு மருத்துவமனையில் மருத்துவரை பார்த்துவிட்டு, காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார்கள் இந்த குடிநீரில் நலம் கலந்திருப்பதாக தெரிகிறது நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கிறார்கள்.

அதற்கு காவல்துறை நீங்களே தவறை ஒப்புக் கொள்ளுதல் உங்களுக்கு சன்மானமும் அரசு வேலை வாய்ப்பை வாங்கி தருகிறோம் என்று சொல்கிறார்கள். இது பல்வேறு அமைப்புகள் மற்றும் புரட்சி பாரதம் உட்பட அனைத்து கட்சிகள் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி இருக்கிறது.

அதற்குப் பிறகு உள்ளூர் காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியாமல் குறிப்பாக தட்டிக் கழிக்கின்ற ஒரு சூழ்நிலையில் வேறு வழியின்றி அரசு சிபிசிஐடிக்கு வாழ்க்கை மாற்றி இருக்கிறது. கிட்டத்தட்ட சி பி சி ஐ டி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு யார் பாதிக்கப்பட்டார்களோ அவர்களே குற்றவாளிகள் என்று அறிக்கை கொடுத்திருக்கிறது.

நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது உண்மையாக எங்களுக்கு வேதனை அளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் மேலேயே வழக்கை திணிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று இன்றைக்கு தலித் மக்கள் கொதித்து எழுந்திருக்கிறார்கள்.

தொடர்ந்து தமிழகத்தில் தினம் தினம் இரவு தூங்கி காலையில் எழுந்திருப்பதற்குள் ஏதாவது ஒரு இடத்தில் நான்கு ஐந்து கொலைகள் நடந்திருக்கும். இப்படி சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்ற வகையில் தமிழகம் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக கடந்த வாரங்களில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவி சக மாணவனனுடன் பேசிக் கொண்டிருந்தபோது கல்லூரிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் எந்த மாணவனை அடித்து விட்டு அந்த மாணவியிடம் பாலியல் சீண்டல் செய்துள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தற்போது கல்லூரிகள் போய் பள்ளிகள் வந்திருக்கிறது. எட்டாம் வகுப்பு படிக்கின்ற ஒரு மாணவியை தான் பாடங்களை கற்றுக் கொடுக்கின்ற ஆசிரியரே பாலியல் பலாத்காரம் செய்திருப்பது வேதனையாக இருக்கிறது, இதனை புரட்சி பாரதம் கண்டிக்கின்றது.

கிருஷ்ணகிரி அருகே இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இது போன்று யாரை நம்பி பள்ளிக்கு அனுப்புகிறார்களோ அவர்களை இதுபோன்ற செயல்களில் செய்வது, யாரைத்தான் நம்புவது என்கின்ற பழமொழிக்கேற்ப அந்த கயவர்களை எதிர் வரும் காலங்களில் இது போன்ற தவறான பார்வை பார்க்காத அளவிற்கு அதிகபட்ச தண்டனையாக இவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். அதோடு மீண்டும் திருச்சி அருகே நான்காம் வகுப்பு படிக்கின்ற மாணவியை தனியார் பள்ளி தாளாளர் வன்கொடுமை செய்திருக்கிறார்.

அது மட்டுமில்லாமல் வேங்கைவயலில் எப்படி குடிநீர் தொட்டியில் மலம் கலந்தார்களோ அதே போல் திருச்சியில் மலம் கலந்திருக்கிறார்கள். இது என்னவென்று புரியவில்லை. அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.

சட்டம் சந்தி சிரிக்கிறது. ஆனால் முதலமைச்சர் அமைச்சர்கள் ஆங்காங்கே சட்டம் நன்றாக இருக்கிறது என்று பேட்டி கொடுக்கிறார்கள். இது கேலிக்கூத்தாக இருக்கிறது. மக்கள் திமுக மீது நம்பிக்கை இழந்து இருக்கிறார்கள்.

தேர்தலுக்கு முன்பாக திமுக பழைய ஓய்வுத்த திட்டத்தை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நடைமுறைப்படுத்துவோம் என்று சொன்னார்கள் நான்கு வருடம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் எதுவும் செய்யவில்லை.

திமுக சின்ன சின்ன வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு அது பெரியதாக நிறைவேற்றி விட்டதாக கொக்கரிப்பது வெடிக்கையாக இருக்கிறது.

திமுக மீது தலித் மக்கள் நம்பிக்கையை இழந்திருக்கிறார்கள் சட்டமன்றத் தேர்தலில் கண்டிப்பாக திமுக எதிர்க்கட்சி வரிசையில் தான் இருக்கும். அல்லது எதிர்க்கட்சி தலைவர் கூட தகுதி இருக்குமா என்று தெரியவில்லை அந்த அளவிற்கு மக்கள் மிகுந்த கோபத்தோடு இருக்கிறார்கள். இந்த ஆட்சியை எப்போது வீட்டுக்கு அனுப்பலாம் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

காவல்துறை முதலமைச்சரிடம் தான் உள்ளது. நாட்டில் நடக்கிறது எல்லாம் முதல்வருக்கு தெரிகிறதா… இல்லையா, ஏன் அமைதியாக இருக்கிறார். காவல்துறை அவரிடம் இருக்கிறதா இல்லையா என்பது சந்தேகமாக உள்ளது வேண்டும். அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Leave a Response