வேங்கை வயலில் நீதி கிடைக்க விட்டால் அங்கே உள்ள மக்கள் மதம் மாறுவதை தவிர வேறு வழி இருக்க முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கூட்டம் ஒன்றில் வேங்கை வயல் விவகாரம் குறித்து பேசிய திருமாவளவன், “என் கடைசி மூச்சு வரை சனாதனத்தை எதிர்த்த நபர் என்றால் அது புரட்சியாளர் அம்பேத்கர் தான். பெரியாரை விட ஒரு படி மேலே போனால் புரட்சியாளர் அம்பேத்கர் தான். நீ இந்த மாதத்தில் இருப்பதால் தானே இப்படி செய்கிறாய் என்று மதம் மாறுகிறேன் என்று கூறினார்.
வேங்கை வயலில் நீதி கிடைக்கவில்லை என்றால் அங்கே உள்ள மக்களும் மதம் மாறுவதை தவிர வேறு வழி இருக்க முடியாது. சிலரிடம் நான் அவசரப்பட வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் வேங்கை வயல் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அவர்களுக்கு மதம் மாறுவதை தவிர வேறு வழியே இல்லை” என்று வீசிக்க தலைவர் குறிப்பிட்டுள்ளார்