தமிழகத்தில் பல்வேறு அரசு பள்ளிகளின் உள்ளன. அப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தப்படவில்லை. இதற்கு திமுக ஆட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது, கிராமப்புற பள்ளிகளின் கல்வி தரம் குறித்த அறிக்கையின் படி நாட்டின் பிற மாநிலங்களை விடவும் பல பிரிவுகளில் தமிழகம் பின்தங்கி உள்ளது. பள்ளிக்கல்வித்துறை குறித்து தமிழக அரசு கூறுவதற்கு நேர்மாறான புள்ளி விவரங்கள் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களின் 28, 984 பள்ளி குழந்தைகளிடம் எடுக்கப்பட்ட ஆய்வாகும்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பள்ளி மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைப்பது, பாத்திரங்களை கழுவ வைப்பது, அமைச்சர்கள் பங்கேற்குமாறு நிகழ்ச்சியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் போல நடத்துவது என்று மிகவும் தரகுறைவாக நடத்தும் பள்ளி கல்வித்துறையின் செயலிழந்த தன்மையால் தமிழக பள்ளி மாணவர்கள் கற்றல் திறனை இழந்து வருவது, இந்த அறிக்கையின் மூலம் வெளிப்படையாக தெரிகிறது. மேலும் பல பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் சரி செய்யவில்லை, அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்தவும் செயல்பாடுகள் எதுவும் இல்லை, பள்ளி மாணவர்களுக்கு புதுமையான கல்வி முறையோ திட்டங்களோ அறிமுகப்படுத்தவில்லை.
ஆனால் நாட்டிலேயே கல்வித் தரத்தில் முன்னணியில் இருக்கிறோம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறுகிறார். எதற்கெடுத்தாலும் குறை கூறப்படும் பீகார் மாநிலம் கூட தமிழகத்தை விட கல்வித்துறையில் முன்னேறி உள்ளது என்று தெரிவித்துள்ளார். தகுதியானவரை அமைச்சராக்கி இருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது என்று கூறினார். மேலும் அமைச்சர் பதவியில் இருந்து அன்பில் மகேஷை நீக்கிவிட்டு அந்த துறைக்கு புதிதாக ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.