திமுக கட்சியின் எம் பி கனிமொழி சீமானை கூலிக்காரன் என்று விமர்சித்த நிலையில் அதற்கு சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.
சீமான் கூறியதாவது: பெரியாரை விமர்சித்த நான் கூலிக்காரன் என்றால் என்னை விட அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோர்தான் பலமுறை விமர்சித்துள்ளனர். அப்படி பார்த்தால் உங்க அப்பா கருணாநிதி தான் பெரிய கூலிக்காரர். அதன் பிறகு தமிழகத்தில் எத்தனையோ தொகுதிகள் இருக்கும்போது தூத்துக்குடியில் போட்டியிட்டது எதற்காக. ஜாதி பார்த்து போட்டியிட்ட நீங்க எல்லாம் பெரியாரைப் பற்றி பேசலாமா என்றார்.
அதன் பிறகு ஓட்டுக்கு காசு கொடுத்து என் மக்களிடம் ஓட்டை பிச்சையாக பறிக்கிற கூலி. நீங்க சரியான ஆளாக இருந்தால் ஓட்டுக்கு காசு கொடுக்காமல் நின்னுப்பாருங்கள். அது எங்க அம்மா தமிழிசை சொல்வது போல் உங்களை எதிர்க்க போட்டுவிட்ட இடத்தில் ஒரு ரூபாய் கூட காசு கொடுக்க வேண்டும் என்றால் அப்படி ஒரு வெற்றியை எனக்கு தேவை இல்லை என்று கூறியவர். ஓட்டுக்கு காசு கொடுக்க மாட்டேன் என்று சொன்ன தமிழிசை தான் உண்மையான தமிழச்சி. அந்த மாதிரி நீங்க காசு கொடுக்காமல் நின்றீர்களா. பெரிய கலைஞரின் மகள் தானே ஓட்டுக்கு காசு கொடுக்காமல் நின்று ஜெயிக்க வேண்டியது தானே. எல்லாம் உன் ஜாதிக்காரங்க தான அப்படி இருக்கும்போது எதற்காக ஓட்டுக்கு காசு கொடுத்துவிட்டு நின்ன என்று கூறினார். மேலும் தமிழிசை சௌந்தரராஜனை புகழ்ந்து பேசி கனிமொழியை சீமான் விமர்சித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.