ஆந்திர மாநிலம் கம்மத்தில் மவுனிகா(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் சூரியா பேட்டையில் உள்ள கல்லூரியில் விரிவுரையாளர்களாக பணிபுரிந்து வருகின்றார்.
கடந்த 6 வருடங்களுக்கு முன்பு, பட்டப்படிப்பை முடித்த மவுனிகா போட்டி தேர்வுகளில் கலந்து கொள்வதற்காக விஜய்வாடாவுக்கு சென்றிருந்தார். அப்போது நிதானபுரத்தில் வசிக்கும் ஷேக் பாஜி என்பவரும் அங்கு சென்று இருந்தார் .இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. மவுனிகாவை திருமணம் செய்து கொள்வதற்காக ஷேக் பாஜி தனது சொந்த ஊருக்கு அவரை அழைத்துச் சென்றார்.
இதை அறிந்த மவுனிகாவின் பெற்றோர் ஷேக் பாஜியின் ஊருக்கு சென்று அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று தனது மகளிடம் அழுது புலம்பினர். ஆனால் மவுனிகாவின் மனம் மாறவில்லை. இதையடுத்து மவுனிகா தனது பெயரை பிரேகா என்று மாற்றிக் கொண்டார். அதன்பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு மெஹத் (5)மற்றும் மெனுருல்(4) என்று 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் ஷேக் பாஜி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காவல்துறையினர் பைக், செல்போன் திருட்டு, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களை செய்ததாக கூறி அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட கணவன் திருடனாக உள்ளதை நினைத்து மவுனிகா வருத்தத்தில் இருந்துள்ளார். இதனால் விரத்தியடைந்த அவர் குழந்தைகள் 2 பேரையும் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தார். பின்னர் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களது உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.